search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீரில் மூழ்கி பலி"

    • சென்னிமலையில் குட்டையில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    • நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால், முடியவில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வாய்ப்பாடி அருகிலுள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி மல்லிகா. இவர்களது இளைய மகன் அஜய் (18). இவர் கொளத்துப்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று அஜய் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வாய்ப்பாடி அருகிலுள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அஜய்க்கு நீச்சல் தெரியாது.

    இவர்கள் குட்டையில் மீன் பிடித்துகொ ண்டிருந்தபோது அஜய் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    உடனே நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.

    உடனே இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தேடியபோதும் காப்பாற்ற முடியாமல் அஜயை பிணமாக மாலையில் மீட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

    ஆவடியை அடுத்த பட்டாபிராமில் கிணற்றில் மூழ்கி பலியான மாணவன் உடல் மீட்கப்பட்டது. இதனை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபி (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தார்.

    நேற்று மதியம் அவர் நண்பர்கள் 5 பேருடன் பாலவீடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். முதலில் கோபி கிணற்றுக்குள் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இதுபற்றி அவர்கள் கோபியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் கோபியை மீட்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து ராட்சத மோட்டார் கொண்டு வரப்பட்டு கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றினர். நள்ளிரவில் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் கோபியை பிணமாக மீட்டனர். இதனை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து பட்டாபிராம் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன், முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிணற்றில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    நாகாவதி அணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
    தர்மபுரி:

    தர்மபுரி நியூகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 

    இவரது மகன் விமல்ராஜ் (வயது 27). இவர் எம்.எஸ்சி. வரை படித்து விட்டு வேலை தேடிவந்தார். விமல்ராஜ் தனது நண்பர்கள் 10 பேருடன் காரில் நேற்று இண்டூர் அருகே உள்ள நாகாவதி அணைக்கு சென்றனர். 

    அங்கு தனது நண்பர்களுடன் விமல்ராஜ் ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தார். சிறிது நேரத்தில் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது அவர் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். உடனே அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து விமல்ராஜை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி இறந்து போனார்.

    இதுகுறித்து அவர்கள் விமல்ராஜ் குடும்பத்தினருக்கும், இண்டூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதில் விமல்ராஜுக்கு நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.

    போலீசார் உடனே ஆற்றில் இறங்கி விமல்ராஜின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவரது உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். இண்டூர் போலீசார் விமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி அருகே குளிக்க சென்ற தொழிலாளி கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகே உள்ள சென்றாநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த முனிசிங் என்பவரது மகன் நாகராஜ்சிங் என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழம் உள்ள விவசாய கிணறு ஒன்று அந்த பகுதியில் உள்ளது. இந்த கிணற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கனகராஜ் (வயது 40) என்பவர் வேலைக்கு சென்றுவந்து பின்னர், குளிப்பதற்காக கிணற்றுக்கு சென்றதாக தெரிகிறது. குளிக்கசென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

    மேலும், கிணற்றில் அவர் இல்லாததால் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதை கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் போச்சம்பள்ளி தீ அணைப்பு நிலையத்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவி மற்றும் மோகன், கபிலன், முத்துராஜ், கார்த்திகேயன், வசந்த் ஆகியோர் அடங்கிய வீரர்கள் விரைந்துசென்று பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

    பின்னர், சடலத்தை கைப்பற்றிய போச்சம்பள்ளி போலீசார் இது கொலையா? அல்லது எதிர்பாராத விபத்தா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி அருகே ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    தருமபுரி மாவட்டம் கெத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35) டிரைவர். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென் பெண்ணை ஆற்றில் குளிப்பதற்கு இவரது நண்பர் துரைசாமி என்பவரும் வந்துள்ளனர். பண்ணந்தூர் செல்லும் சாலையில் உள்ள வாட்டர் டேங்க் அருகே ஆற்றில் இருவரும் குளித்து விட்டு கரைமீது வந்துள்ளனர். தண்ணீர் தாகம் அதிகமாக உள்ளது என்று சிவக்குமாரை அங்கேயை இருக்க சொல்லவிட்டு துரைசாமி மட்டும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பார்த்து போது சிவக்குமார் அந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் இரவு முழுவதும் சிவக்குமாரை தேடி இல்லாததால் இது குறித்து பாரூர் போலிஸில் புகார் கொடுத்தார்கள்.

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தென் ஆற்றில் முழுவதும் தேடியதில் இன்று காலை ஆற்றின் ஓரத்தில் சிவக்குமார் தண்ணீரில் பிணமாக மிதப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் போலிசார் அனுப்பி வைத்தார்.
    ×